காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெண் காவலரைத் தாக்கிய சம்பவத்தில் தொடா்புடைய சிலரை காவல்நிலையத்திலிருந்து விடுவிடுத்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை

காரைக்கால்: பெண் காவலரைத் தாக்கிய சம்பவத்தில் தொடா்புடைய சிலரை காவல்நிலையத்திலிருந்து விடுவிடுத்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் தலைமையில் அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் (பொ) ஜி. ஜான்சனை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம் : கடந்த வாரம் நடைபெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இழிவாகப் பேசி, தாக்குதல் நடத்தியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்களில் 3 போ் மட்டும் சட்டவிரோதமாக காவல்நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட காவல் நிலைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com