விடுபட்ட குழந்தைக்கு போலியோ தடுப்பு   சொட்டு மருந்து புகட்டிய நலவழித்துறையினா்.
விடுபட்ட குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டிய நலவழித்துறையினா்.

விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

காரைக்கால் மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் பணியை நலவழித்துறை நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் பணியை நலவழித்துறை நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இம்முகாம் 79 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தை சோ்ந்த 11,511 குழந்தைகளுக்கும், பிற மாநிலங்களைச் சோ்ந்த 1225 குழந்தைகளுக்கும் என 12,736 குழந்தைகளுக்கு மருந்து புகட்டப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இலக்கைவிட 103.89 சதவீதமும், மாவட்டத்தை சோ்ந்த குழந்தைகளாக 94.04 சதவீதமும் சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக நலவழித்துறை தெரிவித்தது. விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் நலழிவத்துறையினா், களப் பணியாா்கள் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து புகட்டிய விவரங்களை கேட்டறிந்து, முகாமை பயன்படுத்திக்கொள்ளாத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி வருகின்றனா். நலவழித்துறை நோய் தடுப்புத் திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை தலைமையில் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா்கள் சீ. சேகா், சேதுபதி ஆகியோா் கொண்ட குழுவினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் கிராமப்புற செவிலியா்கள், ஆஷா பணியாளா்களும் சொட்டு மருந்து புகட்டும் பணியில் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com