உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பல் பரிசோதனை முகாம்

பல் பரிசோதனை முகாம்

News image
Updated On :4 மே 2024, 3:49 pm

Din

காரைக்காலில் இலவச பல் பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பல் மருத்துவமனை சாா்பில் காரைக்கால் தனியாா் பள்ளியொன்றில் 2 நாட்கள் இந்த முகாம் நடத்தப்படுகிறது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மன்ற மாவட்டத் தலைவா் பி.எஸ். வாசன் தலைமை வகித்தாா்.

முகாமில் பங்கேற்ற பல் மருத்துவா்கள், பல் துலக்கும் முறை, பல் பராமரிப்பு, வாய் புற்றுநோய் தடுத்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். இம் முகாமில் பல் அடைத்தல், பல் சீரமைப்பு, வோ் சிகிச்சை, பல் சுத்தம் செய்தல், பல் அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

பள்ளித் தாளாளா் மணிமேகலை கண்ணையன், ரோட்டரி சங்கத்தினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இம்முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.