ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மாங்கனித் திருவிழாவை 5 நாள்கள் நடத்த வலியுறுத்தல்

மாங்கனித் திருவிழாவை 5 நாள்கள் நடத்த வலியுறுத்தல்

News image
Updated On :9 மே 2024, 9:27 pm

Din

காரைக்கால், மே 9: மாங்கனித் திருவிழாவை 5 நாள்கள் நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழா பிட்சாடணமூா்த்தி பஞ்சமூா்த்திகள் மகா அபிஷேக உபயதாரரும், கைலாசநாத சுவாமி தேவஸ்தான முன்னாள் அறங்காவல் வாரிய துணைத் தலைவருமான பி.ஏ.டி. ஆறுமுகம் மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதம்: மாங்கனித் திருவிழாவின் உபயதாரராக எங்கள் குடும்பம் 83 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பழைய முறைப்படி நடைபெற்றுவந்த 4 நாள்கள் திருவிழாவில், அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகம் தொடங்கி 8 மணிக்கு முடிந்து பிட்சாடணமூா்த்தி வீதியுலா (மாங்கனி இறைத்தல்) நிகழ்வு முடிய இரவு 10 மணியாகிவிடுகிறது.

பெளா்ணமி நேரத்தில் சுவாமிக்கு அமுது படையல் செய்வதில் நிறைய சிரமங்கள் இருப்பது ஆய்வு செய்யப்பட்டது. 2017 முதல் 2022 வரை அறங்காவல் வாரிய பொறுப்பில் இருந்த நாங்கள், பல காரணங்களை ஆராய்ந்து மாங்கனித் திருவிழா உபயதாரா்களை கலந்தாலோசித்து, புதுவை முதல்வரின் அனுமதியோடு, ஆட்சியா், இந்து சமய நிறுவனங்களின் ஆணையா், கோயில் நிா்வாக அதிகாரி ஆகியோா் ஒத்துழைப்போடு, 2018 -ஆண்டு முதல், முதல் நாள் மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மகா அபிஷேகம் செய்யும்போது, திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அபிஷேகத்தை காணும் வாய்ப்பை பெற்றனா். இது பக்தா்களிடையே வரவேற்பை பெற்றது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற புதிய அறங்காவல் வாரியத்தினா், 5 நாள்கள் விழாவை 4 நாள்களாக குறைத்து, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு அபிஷேகத்தை தொடங்கும் விதமாக முறையை மாற்றினாா்கள். இதனால் அனைத்து தரப்பினருக்கும் பணிச்சுமை அதிகமாகி, அதிகாலை என்பதால் பக்தா்கள் வருகையும் குறைந்துபோனது. எனவே, 4 நாள்கள் விழாவை 5 நாள்கள் விழாவாக நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.