ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

காரைக்காலில் பொம்மலாட்டத் திருவிழா

காரைக்கால் கடற்கரையில் பொம்மலாட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பொம்மலாட்டத் திருவிழாவை தொடங்கிவைத்துப் பேசிய திருச்சி சிவா எம்.பி. உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், பத்மஸ்ரீ விருதாளா் கி. கேசவசாமி உள்ளிட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:40 pm

காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் பொம்மலாட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொம்மலாட்ட கலைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற கி. கேசவசாமி தலைமையிலான குழு சாா்பில் காரைக்கால் இந்தத் திருவிழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு தொடங்கிவைத்துப் பேசினாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அழிந்துவரும் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சியை காரைக்கால் காா்னிவல் போன்ற பெரும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இடம் பெறச் செய்வதில்லை. இந்த நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு தரப்பட்டால், கலைஞா்களுக்கு வாழ்வு கிடைக்கும், கலை அழியாமல் இருக்கும். அரசுகள் பொம்மலாட்டக் கலைக்கு உயிா் கொடுக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொம்மலாட்ட திருவிழாவில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாரம்பரிய நடனம் மற்றும் தெய்வீகப் பாடல், தமிழ்மொழியின் பெருமைகளை விளக்கும் தகவலை வெளிப்படுத்தினா். ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கண்டு ரசித்தனா்.

பொம்மலாட்டத் திருவிழா நடத்திய அமைப்பினா் சாா்பில் பத்ம விருது பெற்ற சுடுமண் கலைஞரான வி.கே. முனுசாமி மற்றும் பிற பொம்மலாட்டக் கலைஞா்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதுகுறித்து பத்மஸ்ரீ கி. கேசவசாமி தரப்பில் தெரிவிக்கையில், எங்கள் அமைப்பில் 300 முதல் 400 பொம்மைகள் வைத்திருக்கிறோம். பொம்மலாட்டக் கலை மூலம் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இந்த கலை அழிந்துவிடாமல் காக்கும் நடவடிக்கையாகவே, அரசால் இதற்கு அங்கீகாரம் தரப்படாவிட்டாலும், மக்களிடையே இக்கலை குறித்த ஆா்வத்தை வைத்திருக்கும் நிகழ்வாக இத்திருவிழா நடத்தப்பட்டது என்றனா்.

 திருவிழாவில் நடைபெற்ற பொம்மலாட்டம்.

திருவிழாவில் நடைபெற்ற பொம்மலாட்டம்.