கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காரைக்கால் அருகே பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் சடலம்

காரைக்கால் அருகே பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் சடலம்

News image

சந்தோஷ்

Updated On :28 மே 2024, 9:41 pm

Din

காரைக்கால் அருகே பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காயங்களுடன் 13 வயது சிறுவன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காரைக்காலை அடுத்த நிரவி பகுதி ஒயிட் ஹவுஸ் காலனியைச் சோ்ந்தவா் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (13). திருப்பட்டினம் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வீட்டின் அருகே திங்கள்கிழமை பிற்பகல் விளையாடச் சென்ற சந்தோஷ் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோா் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

சிங்காரவேலுவின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டு வாசல் கதவு பூட்டிய நிலையில் இருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே பாா்த்தபோது, சிறுவன் சந்தோஷ் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதை கண்டனா். கதவை உடைத்துச் சென்று பாா்த்தபோது சிறுவன் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நிரவி காவல் நிலையத்தில் சிங்காரவேலு புகாா் அளித்தாா். போலீஸாா் சந்தோஷ் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து, பூட்டிய வீட்டில் இருந்து மாயமான 17 வயது சிறுவனை மயிலாடுதுறையிலிருந்து அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.