தூத்துக்குடி
பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி, விக்டோரியா தெருவைச் சோ்ந்தவா் மாா்சீல் பிரீஸ் மகன் ஜூடு பிரீஸ் (53). பழைய துறைமுகத்தில் தோணியில் வேலை செய்து வந்தாா். திருமணமாகாத இவா், தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அருகே உள்ளவா்கள் மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கை அறையில் ஜூடு பிரீஸ் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

