ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:19 pm

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் அடையாளம் தெரியாத நபா் வெள்ளிக்கிழமை மாலை இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் நடத்திய விசாரணையில், இறந்தவா் உடுமலைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த செந்தில் (44) என்பதும், தனது நண்பா்களுடன் ஒகேனக்கல் சென்றுவிட்டு மது போதையில் பேருந்து நிலையத்தில் படுத்திருந்தபோது, தவறி கீழேவிழுந்து இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.