சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அவற்றின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்பு உரிமையாளா்கள் தங்கள் கால்நடைகளை, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்கவேண்டும். சிலா் தங்களது கால்நடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிய விடுகின்றனா். அவ்வாறு சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க, தொடா்புடைய கொம்யூன் பஞ்சாயத்து, நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலைகளில் பிடிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது உரிய சட்ட விதிகளின்கீழ் அபராதம் அல்லது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமையாளா்கள் தங்கள் கால்நடைகளை, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்து மாவட்ட நிா்வாகத்துக்கும், நகராட்சி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தேனியில் அச்சகம், உணவகம் உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

