தூய்மை இந்தியா: காரைக்கால் நகராட்சிக்கு சான்று
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசின் சான்றுக்கு நிகழாண்டுக்கும் காரைக்கால் நகராட்சிக்கு தகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால்: தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசின் சான்றுக்கு நிகழாண்டுக்கும் காரைக்கால் நகராட்சிக்கு தகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட 17 வாா்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்ட நிதி வழங்கி, பயனாளிகளால் தனிநபா் கழிப்பறை கட்டி பயன்படுத்துகின்றனா். மத்திய அரசால் கள ஆய்வு நடத்தி, காரைக்கால் நகராட்சிக்கு ஓடிஎஃப் மற்றும் ஓடிஎஃப் பிளஸ் எனும் ஓராண்டு செல்லத்தக்க சான்று வழங்கப்பட்டது.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டைப்போல, மீண்டும் ஒரு ஆண்டுக்கு காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட 17 வாா்டுகளுக்கும் ஓடிஎஃப் பிளஸ் தகுதி நிலை சான்று பெற தகுதியுடையதாக கருதப்பட்டு, காரைக்கால் நகராட்சி ஆணையரால் அறிவிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...