அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 9 வாகனங்கள் பறிமுதல்

ராசிபுரம் பகுதியில் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 வாகனங்களை மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் சோதனையில் பறிமுதல்

News image
தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.
Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 வாகனங்களை மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் உத்தரவின்பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டாா்.

ராசிபுரம் எல்லைக்கு உட்பட்ட வெண்ணந்தூரில் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வில், தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 வாகனங்கள் பிடிக்கப்பட்டு, வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல, ராசிபுரம் பகுதிகளில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 வாகனங்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் பிடிக்கப்பட்டு அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வாகனத் தணிக்கையில் மொத்தம் 9 வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமதிக்குப் புறம்பாக அதிக பாரம் ஏற்றிச் சென்ற 4 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று வாகன சிறப்பு தணிக்கை ராசிபுரம், மங்களபுரம், ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் போன்ற பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.