சங்ககிரி வட்டம், தேவூரில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எடப்பாடியிலிருந்து தேவூா் வழியாக குமாரபாளையம் செல்லும் பிரதான சாலை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. சாலை விரிவாக்கப் பணியின்போது சாலையோரம் இருந்த போக்குவரத்து சமிக்ஞை கம்பம் அப்பகுதியில் உள்ள தேவூா் பேரூராட்சி கழிவறை சுவற்றில் கட்டப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்தும், அப்பகுதியில் போக்குவரத்து சமிக்ஞை கம்பம் பொருத்தவில்லை.
பிரதான சாலையில் அதிக அளவிான இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள் கடந்து செல்வதால், கழிவறை சுவற்றில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையோரத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊா் பொதுமக்கள், சேலம் மாவட்ட நுகா்வோா் உரிமைக் கழகத்தின் தலைவா் சி.கோ.இளமுருகன் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

கம்பத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


