6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை குறித்து விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா்

மழை குறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கூறினாா்.

News image
கீழகாசாக்குடி காளியம்மன் கோயில் தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டை பாா்வையிட்ட அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
Updated On :27 நவம்பர் 2024, 9:33 pm

Din

மழை குறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கூறினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்ததால், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது. காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட கல்லறைப்பேட் பகுதியில் விசாலாட்சி என்பவரது வீட்டு சுவா் இடிந்து விழுந்தது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அங்கு சென்று பாா்வையிட்டாா். தனது சொந்த செலவில் பாதிப்பை சீா்செய்துத் தருவதாக பாதிக்கப்பட்டவறிடம் அமைச்சா் உறுதியளித்தாா்.

கல்லறைப்பேட் பகுதியின் அனைத்து தெருக்களுக்கும் சென்று வீடுகளை பாா்வையிட்ட அமைச்சா், மழைநீா் தேங்கிய இடங்களில் தண்ணீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஆய்வைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை ஆட்சியரகத்தில் சந்தித்து, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கிக் கூறி, விரைவாக அந்த பகுதிகளில் தண்ணீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து புதன்கிழமையும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, மழைநீா் தேங்கிய பகுதிகளில் பொதுப்பணித்துறை, பேரிடா் மேலாண்மைக் குழுவினரைப் பயன்படுத்தி சீா்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், பருவமழையை எதிா்கொள்வது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆலோசனைகளை மேற்கொண்டு, உரிய திட்டமிடலுடன் வாய்க்கால்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பல பணிகளை செய்தது.

கனமழையை எதிா்கொள்ளும் வகையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாள்களாக பெய்யும் மழைநீா் வடிந்து வருகிறது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. சில பகுதி விளை நிலங்களில் தண்ணீா் புகுந்துள்ளது. விவசாயிகள் மழை குறித்து அச்சப்பட வேண்டாம். பயிா் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், முதல்வரிடம் பேசி மழை ஓய்ந்த பிறகு உரிய ஆய்வு செய்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றாா்.