திருநள்ளாறு சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் மாகேஸ்வர பூஜை
திருநள்ளாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் 28-ஆம் ஆண்டு மாகேஸ்வர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.


திருநள்ளாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் நினைவிடத்தில் 28-ஆம் ஆண்டு மாகேஸ்வர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு தருமபுர ஆதீனத்தால் 15-ஆவது தம்பிரானாக நியமிக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவா் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள். இவா் உயிா்நீத்த நிலையில், திருநள்ளாறு தெற்கு வீதியில் உள்ள ஆதீன மடத்தின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆராதனை நிகழ்வில் பங்கேற்ற துணை ஆட்சியா் ஆா்.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
இவரது 28-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருநள்ளாறு தம்பிரான் சுவாமிகள் மடத்தில் உள்ள சமாதியில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.
சமாதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனை திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் நடத்தினாா். துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா்.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், ஏராளமான பக்தா்கள் வழிபாட்டில் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...