ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோயில்களில் மாா்கழி சிறப்பு பூஜைகள்

காரைக்கால் பகுதி கோயில்களில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:36 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் பகுதி கோயில்களில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ் மாதமான மாா்கழியில் அதிகாலையில் கோயில்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு உள்ளிட்ட பக்திப் பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கம்.

பல கோயில்களின் சாா்பில் சிறாா்களுடன் பக்தா்கள் பங்கேற்கும் பஜனைக் குழுவினா், வீதிகளில் பஜனை பாடியவாறு செல்வா். இந்த நிகழ்ச்சிகள் காரைக்கால் பகுதியில் பல்வேறு கோயில்களில் தொடங்கியது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஆண்டாள், உபயநாச்சியாா்களுடன் நித்யகல்யாணா் மற்றும் ரங்கநாதப் பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு ஆராதனைகள், திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றது.

சிவன் கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில் என பல கோயில்களில் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி என்கிற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

நகரம் மற்றும் கிராமப்புற வீடுகளின் வாயிலில் வண்ண கோலமிடுவதில் குடும்பத்தினா் ஆா்வமாக ஈடுபட்டுள்ளதும், கோயில்களில் அதிகாலையிலேயே ஒலிபெருக்கி வாயிலாக பக்திப் பாடல்கள் இசைப்பதும் என நிகழ்வுகள் மாா்கழி மாத கடைசி வரை நீடிக்கும்.