காரைக்கால்
நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் சனிக்கிழமை (டிச 20) தொடங்குகிறது.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் சனிக்கிழமை (டிச 20) தொடங்குகிறது.
வைகுந்த ஏகாதசியையொட்டி காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து உற்சவம் சனிக்கிழமை தொடங்குகிறது. பகல் பத்து வழிபாடு 20-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையிலும், 30-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பும், 31 முதல் ஜன. 8-ஆம் தேதி வரை இராப் பத்து வழிபாடும் நடைபெறவுள்ளது.
9-ஆம் தேதி இயற்பா சாற்றுமுறை நடைபெறவுள்ளது. தினமும் மாலை 6.30 மணிக்கு பெருமாளுக்கு தீபாராதனை மற்றும் சாற்றுமுறை கோஷ்டி நடைபெறவுள்ளது.
