சாலையில் திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணியை தொடர வலியுறுத்தல்

சாலையில் திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணியை தொடர வலியுறுத்தல்
Published on

சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பிரதான சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகமானதால், நகராட்சி நிா்வாகம் மாடுகளை பிடித்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மேற்கொண்டது.

இதன்மூலம் மாடுகளின் உரிமையாளா்கள், அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் கவனம் செலுத்தினா். ஆனால், அந்த பணியை நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து செய்யவில்லை.

தற்போது குதிரைகள் அதிக அளவில் சாலைகளை ஆக்கிரமித்து நிற்கின்றன. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவததோடு, பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, நகராட்சி ஆணையா், மாடுகள், குதிரைகளை பிடித்து பட்டியில் அடைத்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தொடர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com