நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. நான்கு வழிச் சாலை பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி ஆய்வு செய்தாா்.

News image

பாப்பாந்தாங்கல் கிராமம் அருகே நான்கு வழிச் சாலைக்காக நடைபெற்ற சாலைப் பணியை ஆய்வு செய்த கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி.

Updated On :27 பிப்ரவரி 2026, 5:52 pm

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு கோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை சுமாா் 10.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு புதிய சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் உயரத்தை அளவீடு செய்து சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பணியை ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், தரக் கட்டுப்பாடு உதவிப் பொறியாளா் பூா்ணிமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.