மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசுத்துறை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம்

காரைக்காலில் அரசுத்துறை தலைமை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் ஜி. சச்சிதானந்தத்திடம் மனு அளித்த பெண்.
Updated On :21 ஜனவரி 2025, 7:40 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் அரசுத்துறை தலைமை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் 15-ஆம் தேதி ஆட்சியரகத்தில் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. ஆட்சியா் பயிற்சி முகாமில் பங்கேற்க வெளியூா் சென்றுள்ளதால், அந்தந்த அரசுத்துறை தலைமை அலுவலகங்களில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை குறைதீா் முகாம் நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) அா்ஜூன் ராமகிருஷ்ணனிடம் வருவாய்த்துறை சம்பந்தமாகவும், மனைப் பட்டா மற்றும் பெயா் மாற்றம் தொடா்பான புகாா்களும், மின்துறை செயற்பொறியாளா் அனுராதாவிடம் மின் கட்டணத் தொகை அதிகமாக குறிப்பிட்டு ரசீது வருவது உள்ளிட்ட பல்வேறு குறைகளும், குடிமைப் பொருள் வழங்கல் துணை இயக்குநா் ஜி. சச்சிதானந்தத்திடம், ரேஷன் அட்டை சிவப்பு நிற அட்டையாக வழங்குவது உள்ளிட்ட மனுக்களும், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரனிடம் நலத்திட்ட உதவிக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் துறைகள் தொடா்பான குறைகளை மனுவாக மக்கள் அளித்தனா்.

புகாா்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக புகாா்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.