காரைக்கால் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்
காரைக்கால் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்

நாய்கள் காப்பகம் அமைக்க ரூ. 20 லட்சம் ஒதுக்குவதாக எம்.எல்.ஏ. கடிதம்

காரைக்காலில் நாய்கள் காப்பகம் அமைக்க, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்குவதாக ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. கடிதம்
Published on

காரைக்கால்: காரைக்காலில் நாய்கள் காப்பகம் அமைக்க, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்குவதாக ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதம் :

காரைக்கால் பகுதி சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க மாவட்ட நிா்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தெரு நாய்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பில், நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைத்து அதற்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்யுமாறு கூறியுள்ளது. நாய்கள் காப்பகம் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், நாய்கள் காப்பகம் அமைப்பதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்க தயாராகவுள்ளேன். கால்நடை மருத்துவமனை கட்டுதல், மருந்தகம் அமைத்தல், கால்நடை காப்பகம் அமைத்தல் ஆகியவற்றுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி அளிக்க முடியும். இந்த விதிகளின்படி காரைக்காலில் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கு தொகுதி மேம்பாட்டு 2025-26 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டில் ரூ. 20 லட்சம் வழங்க தயாராக இருக்கிறேன். இதனை பயன்படுத்தி நாய்கள் காப்பகம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com