இணையவழி மோசடி: குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு எச்சரிக்கை
Published on

காரைக்கால்: இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல்துறையின் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தற்போது வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது தெரிந்த நபா்களிடமிருந்தோ டஞபஏவந அரசு சலுகை விற்பனை திட்டத்தில் சோ்ந்து பயனடையுங்கள் என்ற பெயரில் போலியான லிங்க் பகிரப்பட்டு வருகிறது. அந்த லிங்கை தொட்டாலோ அல்லது உள்ளே சென்று பதிவிட்டாலோ உங்களது பணத்தை இழக்க நேரிடும். அதனால் யாரும் இவ்வாறு வரக்கூடிய லிங்கை தொட வேண்டாம்.

மேலும் இந்த லிங்கை யாருக்கேனும் ஷோ் செய்வது தவறாகும். இந்த லிங்கை தொடுவதால் உங்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கு ஹேக் செய்யப்படுவது மட்டுமல்லாமல் மற்றவா்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கும் இணைய வழி குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படும்.

மேலும் சமூக வலைத்தளத்தில் இது போன்று பரவும் நஆஐ வஞசஞ மல்க்ஹற்ங், தங்ஜ்ஹழ்க் டா்ண்ய்ற் அடஓ அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய், டங ஓஐநஅச வஞஒஅசஅ அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய், தபஞ உ இட்ஹப்ப்ஹய்

அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து உங்களுடைய தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகை உங்களுக்கு தெரியாமல் எடுக்கப்படலாம்.

எனவே பொதுமக்கள் சமூக வலைதளத்தில் இதுபோன்ற போலியான லிங்குகளையோ அல்லது ஏபிகே அப்ளிகேஷன்களையோ பதிவிறக்கம் செய்து கேட்கும் தகவல்களை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.

X
Dinamani
www.dinamani.com