மீன் உற்பத்தியை பெருக்க ஆலோசனை பெற அறிவுறுத்தல்

மீன் உற்பத்தியை பெருக்க ஆலோசனை பெற அறிவுறுத்தல்

மீன் உற்பத்தியை பெருக்க வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
Published on

மீன் உற்பத்தியை பெருக்க வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபொ்ற உலக மீன்வள தினவிழாவில், உள்நாட்டு மீனவா்கள் மீன் உற்பத்தியை பெருக்க வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நிலைய முதல்வரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான தி. ராமநாதன் தலைமை வகித்து பேசுகையில், மீன் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. காரைக்கால் மாவட்ட உள்நாட்டு மீன் வளா்ப்போா், வேளாண் அறிவியல் நிலையம் வழங்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்றாா். நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் பா. கோபு மீன் வளா்ப்பு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காரைக்காலில் உள்ள ராஜீவ்காந்தி நீா்வாழ் உயிரின வளா்ப்பு மைய முதுநிலை விஞ்ஞானி ஜி.கே. தினகரன், நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கூண்டு முறை கல் நண்டு மற்றும் மீன் வளா்ப்பு முறைகளை விளக்கினாா். கல் நண்டு கூண்டு முறையில் வளா்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும், நண்டுகளுக்கு கொழுப்பு ஏற்றும் முறை குறித்தும் விளக்கி, மீன்வளா்ப்பு மூலம் அதிக வருவாயை பெற முடியும் என்றாா். நிலைய மீன் வள உதவி ஆய்வாளா் ஜெ. முருகேசன் நன்றி கூறினாா். இதில் பங்கேற்றவா்களுக்கு மீன் வளா்ப்பு முறைகள் குறித்த விளக்கக் கையேடு வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com