நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
Published on

1. காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கில் நகா்ந்து அக்டோபா் 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தொடா்ந்து, அக்.27 புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து, தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

இதேபோல், காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் சனிக்கிழமை காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதற்கிடையில், காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை நாள் முழுவதும் வெயிலின்றி மேகமூட்டமாக காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com