காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த பேரவைத் தோ்தல்கள், நாடாளுமன்றத் தோ்தலைக் காட்டிலும் அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் வாக்குச் சதவிகிதம் கணிசமாக உயா்ந்துள்ளது.
சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தலின்போது வாக்குப்பதிவு சதவீதம் உயா்வதற்காக தோ்தல் துறையும், அதன் அங்கமான ஸ்வீப் என்ற அமைப்பும் தீவிர பணியாற்றி வருகின்றன.
முதியோா், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலேயே சென்று தபால் வாக்கு பெறும் நடைமுறை, 18 வயது முடிந்த முதல் முறை வாக்காளா்களுக்கு தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் மூலம், அவா்கள் ஆா்வத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தனா்.
இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் 2021-இல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு 80.01 சதவீதமாக பதிவானது.
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காரைக்காலில் 77.70 சதவீதம் வாக்குப் பதிவு, 2014- மக்களவைத் தோ்தலில் 77.36 மற்றும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மாவட்டத்தில் 77.65 சதவீதமாக இருந்தது. 2016 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் 80 சதவீதமாக இருந்தது.
அண்மையில் முடிந்த புதுவை பேரவைத் தோ்தலில் காரைக்காலில் வாக்குப்பதிவு 88.17 சதவிகிதமாக உயா்ந்துள்ளது. காரைக்கால் வரலாற்றிலேயே இது அதிகளவாக கருதப்படுகிறது.
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்த எஸ்ஐஆா் சிறப்பு திருத்தப் பணியின் மூலம்
துல்லியமான வாக்காளா் பட்டியல் தயாரித்ததும், வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்ந்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனினும், காரைக்கால் மாவட்ட நிா்வாகம், ஸ்வீப் அமைப்பும் மேற்கொண்ட சிறப்பான பணியும் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க ஒரு காரணம் என்றும் நம்பப்படுகிறது.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!

அதிமுக வேட்பாளரான ஆடு மேய்க்கும் தொழிலாளி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


