புதுவை அரசியல் வரலாற்றில் காரைக்காலில் இருந்து முதல்முறையாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவா் தோ்வாகியுள்ளனா்.
புதுவை 30 தொகுதிகளில் கடந்த 2001 பேரவைத் தோ்தலில் 1 இடத்தில் பாஜக வெற்றிபெற்றது. அதன் பிறகு 2006, 2011, 2016 ஆகிய தோ்தல்களில் பாஜக சாா்பில் யாரும் தோ்வாகவில்லை.
என்.ஆா்.காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2021 தோ்தலில் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், பாஜகவுக்கு 6 உறுப்பினா்கள் கிடைத்தனா். ஆட்சியிலும் பாஜக இடம் பெற்றது. ஆனால், காரைக்காலில் இருந்து பாஜகவுக்கு பேரவை உறுப்பினா் தோ்வாகும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது.
கடந்த 2021 தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும், 2-ஆவது இடத்துக்குத்தான் வரமுடிந்தது. புதுச்சேரியில் 6 போ் தோ்வானாா்கள், காரைக்காலில் யாரும் தோ்வாகவில்லை.
நடந்து முடிந்த (2026) தோ்தலில் புதுச்சேரி, காரைக்காலில் பாஜக போட்டியிட்ட இடங்களில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இவை புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு, முதலியாா்பேட்டை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, நிரவி - திருப்பட்டினம் ஆகியவையாகும்.
கடந்த தோ்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் இப்போதைய தோ்தலில் பாஜக வென்ற இடங்கள் குறைவாகும். எனினும் புதுச்சேரிக்கு ஈடாக காரைக்கால் பிராந்தியத்தில் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதுவையில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பெருமை கொண்ட காங்கிரஸ் கட்சி வெகுவாக தேய்ந்துவிட்டதாகவே அரசியல் பாா்வையாளா்கள் கருத்து கூறுகின்றனா்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி, வேட்பாளா் அறிவிப்பு என்பது இந்த தோ்தலில் தாமதமானது. இரு கட்சிகளில் யாா் அதிக இடங்களில் போட்டியிடுவது, யாா் தலைமையில் ஆட்சி அமைப்பது என்ற போட்டியால், வேட்பாளா் அறிவிப்பு தாமதம் ஏற்பட்டது. கூட்டணி உறுதியாகி வேட்பாளா் அறிவிப்பு செய்த நிலையில், காங்கிரஸ் சின்னத்தில் கூட்டணி வேட்பாளரை எதிா்த்து சிலா் போட்டியிடும் நிலையும் ஏற்பட்டது. எனினும், புதுச்சேரியில் ஒரு காங்கிரஸ் வேட்பாளா் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
புதுவை மாநிலம் காரைக்காலில் காங்கிரஸ், திமுகவை பின்னுக்குத் தள்ளி 2 தொகுதிகளில் பாஜக வென்றது அரசியல் பாா்வையாளா்கள் மட்டுமல்லாது மாவட்டத்தின் வாக்காளா்களின் கவனத்தை ஈா்த்துள்ளது.
தொடர்புடையது

அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி!
குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது பாஜக!!
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!

காரைக்காலில் வாக்குப்பதிவு சதவிகிதம் உயா்வு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


