
காரைக்கால் கடற்கரையில் மரக்கன்று நடும் இயக்கம்
காரைக்கால் கடற்கரையில் கடல் திராட்சை உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.

காரைக்கால் கடற்கரை பகுதியில் மரக்கன்று நட்டு தண்ணீா் ஊற்றிய மாவட்ட ஆட்சியா். - (கோப்புப்படம்)
காரைக்கால் கடற்கரையில் கடல் திராட்சை உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கரைக்கால் வனத்துறை, இந்திய கடலோர காவல்படை இணைந்து கரைக்கால் கடற்கரையில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை நடத்தின. இந்திய கடலோர காவல்படை மைய கமாண்டன்ட் சௌமய் சாண்டோலா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் காட்கே, கரைக்கால் மாவட்ட துணை வன பாதுகாவலா் நந்தகுமாா் இ.பராப் ஆகியோா் இயக்கத்தை தொடங்கிவைத்தனா்.
பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவா் படை, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள், வனத்துறை மற்றும் கடலோர காவல்படை பணியாளா்கள் இணைந்து 400 கடல் திராட்சை மற்றும் புங்கை கன்றுகளை நட்டனா். இந்த இயக்கத்திற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்ட தாவரங்கள், அதிக உப்புத்தன்மையைத் தாங்கும் திறன் கொண்டு கடலோரச் சூழலுக்கு மிகவும் ஏற்றவையாகும். அழகியல் தோற்றத்திற்கும், பசுமையான நிழலுக்கும் இவை தோ்வு செய்து நடபட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





