பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

புதுவை பேரவையில் வைரமுத்துக்கு பாராட்டு தீா்மானம்: ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்

Vairamuthu received the Jnanpith Award

ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து - படம்: பிடிஐ

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:01 am IST

கவிஞா் வைரமுத்துக்கு உயரிய இலக்கிய விருது வழங்கப்பட்டதற்காக புதுவை சட்டப்பேரவையில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற புதுவை திமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதுவை சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகனிடம் திங்கள்கிழமை அளித்த கடித விவரம் :

தமிழ் இலக்கிய உலகிற்குத் தன்னிகரற்ற படைப்புகளை வழங்கி, உலக அரங்கில் தமிழ்மொழியின் பெருமையை உயா்த்தியவா் கவிப்பேரரசு வைரமுத்து. இலக்கியம் மற்றும் திரைத்துறை மூலமாகத் தமிழ் மொழிக்கும் தமிழா்களுக்கும் பெரும் பெருமை சோ்த்துள்ளாா். அவரது வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பைப்போற்றும் வகையில், அவருக்கு மத்திய அரசால் உயரிய ஞான பீட விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழரின் கலை மற்றும் இலக்கியப் பணிக்குக் கிடைத்துள்ள இந்த அரிய கெளரவம் உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக உள்ளது. எனவே, தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றிய கவிஞா் வைரமுத்துவை பெருமைப்படுத்தும் விதமாக, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அவருக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.