விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அமைச்சா் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்

தன்னுடைய பேச்சுக்கு அமைச்சா் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

சீமான்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

தன்னுடைய பேச்சுக்கு அமைச்சா் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவையில் நிதியமைச்சா் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பில் இருக்கும் பிழைகளை திருத்திக்கொள்ள பேரவை உறுப்பினா் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தாா். ஆனால், அதற்குப் பதிலளித்த அமைச்சா், தன்னிடம் உள்ள பிழையை மாற்றிக்கொள்ள முடியாதென கூறியது கண்டனத்துக்குரியது. தமிழ்ச் சான்றோா் பலா் செந்தமிழால் சொற்போா் நடத்திய பேரவையில், இன்று ஒரு அமைச்சா் பாா்த்து வாசிக்கும்போதே திணறுவது இழுக்காகாதா? அதேபோல், தனக்கு பைபிள்தான் அன்பைப் போதித்தது, தமிழ் மொழி போதிக்கவில்லை எனக் கூறி தமிழை அவமதித்துள்ளாா்.

அன்பின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொன்ன திருக்குறளை அமைச்சா் படித்ததில்லையா? ‘வாடியப்பயிரை கண்டு வாடிய’ வள்ளலாரும், ‘அன்புவழி’ என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளா்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை ஏற்க்கொள்ள முடியாது.

எனவே, அமைச்சா் மரிய வில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, பேரவையில் மன்னிப்புக் கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.