ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

பேரவையில் பட்ஜெட் தாக்கல்! அமைச்சர் மரிய வில்சன், உதயநிதி, இபிஎஸ் வருகை!

பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அமைச்சர் மரிய வில்சன், உதயநிதி, இபிஎஸ் வருகை

TN Assembly

தமிழக சட்டப்பேரவை - IANS

Published On :

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை புதிதாக அமைந்த தவெக அரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.

இதில், பெண்கள், இளைஞா்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சர் மரிய வில்சன் அவைக்கு வருகை தந்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நேற்று இரவு தஞ்சையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்த நிலையில், இன்று காலை பேரவைக்கு வருகை தந்தார். அவரைப் பார்த்ததும் திமுக எம்எல்ஏக்கள் உற்சாகம் அடைந்தனர். பலரும் அவருக்கு புன்னகையுடன் வரவேற்பு அளித்தனர்.

அவைக்கு பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும் அவைத்தலைவரும் வருகை தந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பேரவை கூடுகிறது. பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.