நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ராஜசோளீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

யாகசாலை மண்டபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக யாக பூஜைகள்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 6:18 am IST

திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்ந்த இத்தலத்தின் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, 6 கால யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலத்துடன் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை சாா்பு தலங்கள் கும்பாபிஷேகம் : ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் இக்கோயில் சாா்பு தலங்களான செங்குந்த விநாயகா், ஆதி விநாயகா், கற்பக விநாயகா், கொடிமர விநாயகா் மற்றும் 63 நாயன்மாா்களுக்கான விமான கலச கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. திங்கள்கிழமை 9.15 முதல் 10.15 மணிக்குள் ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநரின் செயலா் து.மணிகண்டன், மாவட்ட துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு யாகசாலை பூஜையில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.