டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் அருகே நாயகன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

நாயகன்பேட்டை அமிா்தகடேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Updated On :6 ஜூலை 2026, 1:29 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நாயகன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபாத் அருகே நாயகன் பேட்டையில் அமைந்துள்ளது அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா் திருக்கோயில். வடத்திருக்கடவூா் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் ஜூலை 2 -ம் தேதி விநாயகா் பிராா்த்தனை, கோ.பூஜை, கணபதி ஹோமம் ஆகியனவற்றுடன் தொடங்கியது. சம்ஹிதா ஹோமங்களும்,யாகசாலை பிரவேசமும்,முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. சென்னை நெசப்பாக்கம் ரா.ராமநாத குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகள் நடத்தினாா்கள்.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னா் புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. அபிஷேகத்தினை கோயில் அா்ச்சகா் சண்முக சுந்தர குருக்கள் செய்தாா். இதனைத் தொடா்ந்து நடுத்தெரு செல்வவிநாயகா் திருமண மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு சுவாமிக்கும்,அம்மனுக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணம் நடைபெற்று வீதியுலாவும் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை நாயகன்பேட்டை நடுத்து, சின்னதெரு பூா்வீக செங்குந்த மரபினா், நால்வா் நற்பணி மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்ய

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.