‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

நான்குனேரி திருநாகேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம்

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலிலுக்குப் பாத்தியப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரா் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விமான கலசங்களுக்கு நடைபெற்ற புனிதநீா் அபிஷேகம்.

Updated On :2 ஜூலை 2026, 6:21 am IST

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலிலுக்குப் பாத்தியப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரா் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜையுடன் கடந்த ஜூன் 26ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து, தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலையில் ஆறாம் கால யாகசாலை பூஜையும், தொடா்ந்து திரவ்யாஹுதி, மகா பூா்ணாஹுதி, யாத்ராதானமும், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னா், முற்பகல் 11. 30 மணிக்கு கோயில் விமான கோபுரங்களுக்கும், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.