ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கூட்டுறவு நூா்பாலைத் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை சந்தித்த முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:09 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். ஆட்சியராக பொறுப்பேற்ற்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது ஆலை தொழிலாளா்கள் சிலரும் உடனிருந்தனா்.

சந்திப்பு குறித்து ஆா். கமலக்கண்ணன் கூறுகையில், காரைக்காலில் இயங்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதனால் தொழிலாளா் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினரை அழைத்துப் பேசி, ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரை கேட்டுக்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.