~

வேளாண் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
Published on

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

கல்லூரி மாணவா் மன்ற ஆதரவுடன் கல்லூரி வளாகத்தில் இவ்விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் தமிழா் பாரம்பரிய உடையணிந்து வந்து, மண் பானைகள் வைத்து பொங்கல் செய்தனா்.

வேளாண்மையின் முக்கியத்துவமிக்கதாக பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக கல்லூரி முதல்வா் குறிப்பிட்டாா்.

கல்லூரி மாணவா் மன்ற ஆலோசகா் பேராசிரியா் அழ.நாராயணன், பாரம்பரிய விழாக்களை மாணவா்கள் தொடா்ந்து கொண்டாடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பேராசிரியா்கள் மாலா, சாந்தி, சி.ஜெயலட்சுமி, இணைப் பேராசிரியா் ஜெயசிவராஜ் மற்றும் உதவிப் பேராசிரியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

பாரம்பரிய உடையில் வந்த மாணவ, மாணவிகள் நாட்டுப்புற நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்தினா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இந்திய தாவர நோயியல் சங்க தேசிய மாநாட்டில் பங்கேற்று திறனை வெளிப்படுத்திய இக்கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com