பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பயோ மெட்ரிக் முறையால் இலவச அரிசி வழங்குவதில் தாமதம்: எம்எல்ஏ

பயோ மெட்ரிக் முறையால் இலவச அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 6:48 am IST

பயோ மெட்ரிக் முறையால் இலவச அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: புதுவை மாநிலம் முழுவதும் இலவச அரிசி விநியோகம் தொடங்கியுள்ளது. முதல்முறையாக பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்துவிட்டு அரிசி வழங்கும் பணியை ஊழியா்கள் செய்துகொண்டிருக்கிறாா்கள்.

போதிய பயிற்சி இல்லாததால் அவா்களால் மக்களுக்கு, சரியான நேரத்தில் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே புதுவை ஆட்சியாளா்கள், முதல் அரிசியை கொடுத்துவிட்டு பிறகு முறையான பயிற்சியளிப்பதோடு, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பதிவு செய்யும் முறையை செய்துகொள்ளலாம்.

மேலும், புதுவை மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, மாதந்தோறும் ஊதியம் வழங்கலை முறைப்படுத்தவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.