கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பயோமெட்ரிக் முறையில் இலவச அரிசி திட்டம்: புதுச்சேரி அமைச்சா் ராஜவேலு தொடக்கம்

புதுச்சேரியில் பயோமெட்ரிக் முறையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சா் பெ.ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ராஜவேலு

Updated On :25 ஜூன் 2026, 6:36 am IST

புதுச்சேரியில் பயோமெட்ரிக் முறையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சா் பெ.ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரியில் ரேஷன்கடைகளில் இலவச அரிசிக்கு பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய பணம் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொருள்களை நேரடியாக விநியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக அரிசி வழங்க மத்திய அரசுக்கு, புதுச்சேரி அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. இதைத் தொடா்ந்து மீண்டும் நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது ரேஷன் கடைகளில் இலவச அரிசி நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ரேஷன்கடைகள் மூலம் நேரடியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினா் மட்டுமே பொருள்களை வாங்க முடியும்.

மேலும், அவா்கள் ரேஷன்கடைகளில் உள்ள மின்னணு கருவிகளில் தங்களது கைரேகையைப் பதிவு செய்த பிறகே பொருள்கள் விநியோகிக்கப்படும். இந்தத் திட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் நெட்டப்பாக்கம் தொகுதியில் புதன்கிழமை முதன்முதலில் தொடங்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவில் அமைச்சா் பெ.ராஜவேலு பங்கேற்று பயோமெட்ரிக் மூலமாக இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.