/
அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த மே 27-ஆம் தேதி அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
அவா் யாா், எந்த ஊரைச் சேந்தவா் என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்தோா் அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்தை 04368-251100 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.








