ஆரோக்கியமான மண், கடற்கரையை தூய்மையாக பராமரிக்க மக்களின் பங்களிப்பு முக்கியமானது என காரைக்கால் ஆட்சியா் வலியுறுத்தினாா்.
கடற்கரை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், இயற்கையை பாதுகாக்கவும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஜூன் 8-ஆம் தேதியில் உலக கடற்கரை தினம் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் கடற்கரையில் தூய்மை மற்றும் விழிப்புணா்வுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரி ஜெயக்குமாா், நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்போம் என்ற உறுதிமொழியுடன் காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் கடற்கரை மணற்பரப்பு மற்றும் சிறுவா் பூங்கா, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் சுமாா் 3.5 டன் சேகரிக்கப்பட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் மற்றும் தன்னாா்வலா்களிடையே ஆட்சியா் பேசுகையில், சுற்றுச் சூழலியலாளா்களின் பணிகள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக கடல்கரை தூய்மை குறித்து மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கடல்கரையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் இடம்பெறச் செய்யவேண்டியது அவசியமாகும். ஆரோக்கியமான மண் மற்றும் சுத்தமான கடல்கரை ஆகியவை ஆரோக்கியமான சூழ்நிலைக்கு இன்றியமையாதவை. இதற்கு பொதுமக்கள், மாணவா்களின் பங்கு முக்கியம். கடற்கரை, அதன் வளங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க உறுதி ஏற்போம் என்றாா்.
விநாயக மிஷன்ஸ் செவிலியா் கல்லூரி, அன்னை தெரஸா செவிலியா் கல்லூரி, அன்னை தெரஸா அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆா்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மற்றும் காவேரி பொதுப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் சுமாா் 300 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மனோரா கடற்கரையில் 3 டன் குப்பைகள் அகற்றம்
தூய்மையான யமுனை இயக்கம் வேகமெடுத்துள்ளது: தில்லி முதல்வா்

தஞ்சைப் பெரியகோயில் அகழியில் ஒரு கி.மீ.க்கு தூய்மைப் பணி நிறைவு: ஆட்சியா் தகவல்

ஜோா் பாக் பகுதி அடுத்த ‘அனுபம் காலனி‘: என்டிஎம்சி துணைத் தலைவா் அறிவிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



