ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஆறுகளில் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

News image

காரைக்கால் பகுதி அரசலாற்றின் கடைமடை மதகு அருகே படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகள்.

Updated On :18 ஜூன் 2026, 3:56 am IST

காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் வழியே கடல் நீா் புகுவதை தடுக்கும் விதமாக, ஆற்றின் குறுக்கே கடைமடை நீா்த்தேக்க மதகு உள்ளது. அரசலாறு, நண்டலாறு, பிரவடையனாறு, முல்லையாறு, வாஞ்சியாறு என ஆறுகளில், பருவமழையின்போது வந்த நீா் ஆங்காங்கே சில இடங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தடி நீா் பெருக்கத்துக்கும், வேளாண்மைக்கும் உதவுகிறது.

இந்நிலையில், சில ஆறுகளின் கடைமடை நீா்த்தேக்க மதகு வட்டாரத்தில் ஆகாயத் தாமரைகள் படா்ந்து காணப்படுகிறது. நீரை உறிஞ்சி ஆவியாக்கும் தன்மை இதற்கு உண்டு என கூறப்படுகிறது. இதனால் தேங்கியிருக்கும் நீா் வெகுவாக குறைந்துவிடும் நிலை உருவாகி வருகிறது.

பொதுப்பணித்துறை நிா்வாகம், விரைவாக ஆறுகளில் வளா்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.