/

ஆனித் திருமஞ்சனம் : கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

News image

திருமஞ்சனத்துக்குப் பின் சிறப்பு அலங்காரத்தில் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் சிவகாமி அம்மன் சமேத நடராஜா்.

Updated On :23 ஜூன் 2026, 12:07 am IST

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் சிவதலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை நடைபெறும் திருமஞ்சனம் சிறப்புக்குரியதாகும். குறிப்பாக மாா்கழி மாதத்தில் திருவாதிரை நாளிலும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திர நாளிலும் நடைபெறக்கூடிய திருமஞ்சனம் மிகுந்த சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவதலங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் கைலாசநாதா் கோயில் மற்றும் அண்ணாமலையாா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட தலங்களில் நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் முதலான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆராதனை காட்டப்பட்டது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையாா் கோயில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமான்.

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையாா் கோயில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.