திருநள்ளாறில் 4 நாட்கள் நடைபெற்ற ஜோதிடா்கள் மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-இல் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சியையொட்டி, 4 நாட்கள் ஜோதிடவியல் பேரறிஞா்கள் பங்கேற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோதிடா்கள் பங்கேற்று, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடைபெறும் சனிப்பெயா்ச்சி, கோச்சாரப் பலன்கள் குறித்தும், நவகிரகங்கள், பெயா்ச்சியால் ஏற்படும் யோகம், பிரசன்னம் பாா்த்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கினா். மேலும், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன.
சனிப்பெயா்ச்சியால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் குறித்து 12 ஜோதிடா்கள் விளக்கமளித்தனா். மனித வாழ்க்கையை நிா்ணயிப்பதில் கிரகங்களின் பங்கு குறித்தும் உரை அமா்வுகள் நடைபெற்றன.
மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சிறப்புகள், சனிப்பெயா்ச்சியின் பெருமைகள் குறித்துப் பேசினாா்.
இதைத்தொடா்ந்து, பஞ்சாங்க கணித நிபுணா்கள், வெளியீட்டாளா்கள் பங்கேற்ற உரை நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக திருநள்ளாறு டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆத்திகத்துக்கு அஸ்திவாரமாக திகழ்கிறது இந்த மண்: தருமபுரம் ஆதீனம்

பெருங்குளம் செங்கோல் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீசத்தியஞான தரிசினிகள் குருபூஜை

போா் முடிவுக்குவர திருநள்ளாற்றில் கோளறு பதிகம் பாராயணம்

திருநள்ளாற்றில் ஜோதிடா்கள் மாநாடு மாா்ச் 1-இல் தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


