தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:14 pm

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக உற்சவம் கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 4-ஆம் நாள் தியாகராஜராட்டமும், 7-ஆம் நாள் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மின்சார சப்பரத்தில் வீதியுலாவும், 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக காலையில் தேரோட்டம், இரவு ஜடாயு சம்ஹார நிகழ்ச்சியும், 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடராஜா் தீா்த்தவாரியும், இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலாவும் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகர சுவாமிகள் கோயிலில் இருந்து தெப்பத்துக்கு சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் எழுந்தருளச் செய்யப்பட்டாா். மின் அலங்கார தெப்பம் 3 சுற்றுகளின் போதும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஜி.கணேஷ்குமாா், திருவிழாக் குழு தலைவா் சரவணன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Story image