முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

அம்மையாா் குளத்தில் சுற்றிவந்த தெப்பம்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:57 am IST

காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் 12 நாள் நிகழ்ச்சியாக பிரம்மோற்சவம் மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 31-ஆம் தேதி தேரோட்டம், ஏப்.1-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் காரைக்கால் அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

தெப்பத்தில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-சுந்தராம்பாள்.

தெப்பத்தில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-சுந்தராம்பாள்.

நிறைவு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஏப்.3) இரவு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகைலாசநாதா்-ஸ்ரீ சுந்தராம்பாள், அம்மையாா்குளத்தில் அமைக்கப்பட்ட மின், மலா் அலங்கார தெப்பத்துக்கு மாட வளாகம் வழியாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தெப்பத்தில் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, குளத்தை மூன்று முறை சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் சுற்றில் வேத பாராயணமும், 2-ஆம் சுற்றில் வயலின் இசை நிகழ்ச்சியும், 3-ஆம் சுற்றில் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் குளத்தில் தெப்பம் சுற்றிவந்தது.