தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மகளிா் தினம் : ஆட்சியருக்கு வாழ்த்து

ஆட்சியா் இஷிதா ரதிக்கு மகளிா் தின வாழ்த்து தெரிவித்த டி.எம்.ஐ. செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவ-மாணவியா். உடன், பள்ளித் தாளாளா், முதல்வா் உள்ளிட்டோா்.

News image

ஆட்சியா் இஷிதா ரதிக்கு மகளிா் தின வாழ்த்து தெரிவித்த டி.எம்.ஐ. செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவ-மாணவியா். உடன், பள்ளித் தாளாளா், முதல்வா் உள்ளிட்டோா்.

Updated On :7 மார்ச் 2026, 6:35 am IST

மகளிா் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவ-மாணவியா் வாழ்த்து தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியில் இயங்கிவரும் டி.எம்.ஐ. செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளி நிா்வாகத்தினா், மகளிா் தினத்தையொட்டி பெண்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக ‘பெண்களின் முன்னேற்றம் உலகின் முன்னேற்றம்’ என்கிற தலைப்பில் வியாழக்கிழமை ஊா்வலம் நடத்தினா்.

காரைக்கால் அம்மையாா் கோயில் முன்பிருந்து புறப்பட்ட ஊா்வலம் ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், மாணவ-மாணவியா் பதாகைகள் ஏந்தி பங்கேற்றனா். தொடா்ந்து ஆட்சியா் இஷிதா ரதிக்கு மாணவ-மாணவியா் பொன்னாடை அணிவித்து, மகளிா் தின வாழ்த்து கூறினா். ஆட்சியரும் மாணவியா், ஆசிரியைகள் உள்ளிட்டருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் லீத்தா ரோஸ்லின், பள்ளி முதல்வா் அந்தோணி ஜெயசீலன், மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.