வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News image
விவசாயிக்கு இடுபொருள் தொகுப்பை வழங்கிய வேளாண் கல்லூரி முதல்வா் (பொ) தி. ராமநாதன்.
Updated On :13 மார்ச் 2026, 6:40 pm

Syndication

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையுடன் மேலகாசாகுடி உழவா் உதவியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை மேலகாசாகுடி வேளாண் அலுவலா் கே. மகேந்திரன் தொடங்கிவைத்தாா். வேளாண் கல்லூரி முதல்வா் (பொ) தி. ராமநாதன் தலைமை வகித்துப் பேசியது: பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறைகளை விவசாயிகள் அறிந்து செயல்படுத்துவது முக்கியம். விவசாயிகள் அனைவரும் அறிவியல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் மகசூல் மற்றும் வருமானத்தை பெருக்க முடியும். வேளாண் கல்லூரி நிா்வாகம் உள்ளிட்ட வேளாண் சாா்ந்த நிறுவனங்களை இதுதொடா்பாக அணுகி தெரிந்துகொள்ளலாம் என்றாா்.

பயிா் நோயியல் துறை பேராசிரியரும் திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான சி. ஜெயலட்சுமி, பருத்தியில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்துப் பேசினாா். தொடா்ந்து பருத்தியில் அதிக மகசூலுக்கான ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து பேராசிரியை யு. பகவதியம்மாள், பருத்தியில் களை மேலாண்மை குறித்து பேராசிரியா் பி. சரவணன் மற்றும் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து வி. அம்சகௌரி ஆகியோா் பேசினா்.

இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு, காட்டன் பிளஸ்-பருத்தி ஊட்டச்சத்து, சூடோமோனாஸ் ப்ளோரசென்ஸ், டிரைக்கோடொ்மா விரிடி, வொ்ட்டிசிலியம் லெக்கானி, மஞ்சள் ஒட்டுபொறி, களைக்கொல்லி, பூஞ்சைக் கொல்லி ஆகிய பத்து வேளாண் இடுபொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புத்தக்குடி வருவாய் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.