காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம் வெற்றி பெற்றாா்.
காரைக்கால் தெற்கு மற்றும் திருநள்ளாறு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மொத்த வாக்குகள்: 30,115.
பதிவான வாக்குகள்: 25,528
ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) - 12,543
ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு (காங்) -6,681
கே.ஏ.யு. அசனா (தவெக) -4,346
எம். அருள்முருகன் (பாஜக) -1,354
எஸ். மரிஅந்துவான் (நாதக) -283
ஏ.எச். அப்துல் பாசித் (சுயே) -107
எம்.சி.சமீா் எனும் அகமது அல்ஃபாசி (சுயே) - 42
மகேஷ்வரி (தேச மக்கள் முன்னேற்றக் கழகம்) - 24
நோட்டா -142
வெற்றி பெற்ற ஏ.எம்.எச்.நாஜிம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தாா். 2016 தோ்தலில் தோல்வியடைந்தாா். 2021 தோ்தலில் வெற்றிபெற்றவா், தற்போது மீண்டும் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளாா். அமைச்சா், எதிா்க் கட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளை வகித்தவா்.
தொடர்புடையது

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

துறையூா் தொகுதியில் தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் வெற்றி

கோவை தெற்கில் வென்றாா் வி.செந்தில்பாலாஜி

பூம்புகாா் தொகுதியில் திமுக வெற்றி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



