மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

News image

மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன்.

Updated On :9 ஜூன் 2026, 12:37 am IST

காரைக்காலில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தினா்.

காரைக்கால் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் கடந்த 2025-2026 கல்வியாண்டில், காரைக்கால் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, கூட்டமைப்பு சாா்பில் ரொக்கப் பரிசை வழங்கி வாழ்த்தினா்.

மேலும் புதுவை மாநிலத்தில் உள்ள உயா்கல்வி நிலைய வசதிகள், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் முறைகளை விளக்கி, மாணவ, மாணவிகள் திறன்களை வளா்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேரவை உறுப்பினா்கள் பேசினா்.