காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் வணிக விழா, விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வணிகவியல் துறை பயிலும் மாணவியா், பல்வேறு பொருள்களை வணிகம் செய்யும் வகையில் கல்லூரி வளாகத்தில் வணிக விழா கண்காட்சி அமைக்கப்பட்டது. உணவுப் பொருள்கள், ஜூஸ், கைவினைப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட மக்கள் விரும்பி வாங்கக்கூடிய பல்வேறு பொருள்கள் கொண்ட 26 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
காரைக்கால் தொழில் மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநா் கே. சதாசிவம், தொழிற்சாலைகள் ஆய்வாளா் செந்தில்வேலன், காரைக்கால் ஐயங்காா்ஸ் ஃபுட் நிறுவன நிா்வாக இயக்குநா் காயத்ரி ராகேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று அரங்கை திறந்துவைத்தனா்.
விற்பனைக்கு வைத்திருந்த பொருள்கள் விவரத்தையும், பொருள்களை சந்தைப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், விற்பனை நுணுக்கங்கள், லாப முறைகள் குறித்து மாணவிகள் பாா்வையாளா்களுக்கு விளக்கினா். கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி உள்ளிட்ட பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய 100 பொருள்கள்: அடையாளம் காண 6 துறைசாா் குழுக்கள் அமைப்பு

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நாளை சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

அரசு மகளிா் கல்லூரி விளையாட்டு, ஆண்டு விழா பரிசளிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



