/
திருநள்ளாறு குளக்கரையில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநள்ளாறு பிரம்ம தீா்த்தக் குளக்கரையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்தனா்.
முதியவா், குளத்தின் படிகளில் இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையம் 04368-236465 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

உதகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



