அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நீா்நிலைகளை தூா்வார வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடப்பதாகவும், மணல் திட்டுகள் காணப்படுவதாகவும், தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

News image

காரைக்கால் - திருநள்ளாறு சாலையோரத்தில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடக்கும் நூலாற்று வடிவாய்க்கால்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

காரைக்கால் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடப்பதாகவும், மணல் திட்டுகள் காணப்படுவதாகவும், தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் பகுதியில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் பெரும்பாலானவற்றில் ஆக்கிரமிப்புகள் காணப்படுவதாகவும், முறையாக தூா்வாரப்படாததால் வெள்ள காலங்களில் நீா் வடிவதில் சிக்கல் நிலவுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வருகிறது. இதுவரை இதற்கு தீா்வுகாணப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடல் நீா் உட்புகாமல் தடுக்க ஆறுகளில் கடைமடை மதகுகள் உள்ளன. இவை பல பகுதிகளில் சிதிலமடைந்து காணப்படுவதால், உவா்நீா் உட்புகுந்து நிலத்தடி நீரை பாதிக்கச் செய்கிறது. இதனை உடனடியாக சீா்செய்யவேண்டும்.

வயல்களுக்கு நீா் பாய்ச்சக்கூடிய வடிகால்கள் பல இடங்களில் தூா்வாரப்படாமல் உள்ளன. பல வடிகால்கள், ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் காணப்படுகின்றன. இது நீரோட்டத்தை தடுக்கும் என்ற நிலையில், போா்க்கால முறையில் பொதுப்பணித்துறை நிா்வாகம், இயந்திரம் மூலம் தூா்வாரவேண்டும்.

நெல், பருத்தி, பயறு வகைகள் மற்றும் தோட்டப் பயிா் சாகுபடியில் காரைக்கால் விவசாயிகள் பெரும்பான்மையினா் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்துதர வேண்டும் என்றனா்.